/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கும்மிடி தரைப்பாலம் சேதம் உயர்மட்ட பாலம் அமையுமா? கும்மிடி தரைப்பாலம் சேதம் உயர்மட்ட பாலம் அமையுமா?
கும்மிடி தரைப்பாலம் சேதம் உயர்மட்ட பாலம் அமையுமா?
கும்மிடி தரைப்பாலம் சேதம் உயர்மட்ட பாலம் அமையுமா?
கும்மிடி தரைப்பாலம் சேதம் உயர்மட்ட பாலம் அமையுமா?
ADDED : ஜூன் 03, 2024 04:31 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து, மேட்டுத் தெரு செல்லும் சாலையின் குறுக்கே, ஏரிகளின் உபரி நீர் கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாய் மீது தரைப்பாலம் உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தொடர் மழையின் போது, சாலையின் குறுக்கே தரைப்பாலத்திற்கு மேல் 3 அடி உயரத்திற்கு மழை வெள்ளம் சென்றது.
அப்போது, தரைப்பாலம் மூடப்பட்டு, மூன்று நாட்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பாலத்தில் அரிப்பு ஏற்பட்டு முற்றிலும் சேதமடைந்தது. சாலை அரிப்பை அடைக்கும் விதமாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தரைப்பாலம் சேதமடைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, கும்மிடிப்பூண்டி வாசிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, உயர்மட்ட பாலம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.