/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மீடியனில் குப்பை குவிப்பு எளாவூர் ஊராட்சி மெத்தனம் மீடியனில் குப்பை குவிப்பு எளாவூர் ஊராட்சி மெத்தனம்
மீடியனில் குப்பை குவிப்பு எளாவூர் ஊராட்சி மெத்தனம்
மீடியனில் குப்பை குவிப்பு எளாவூர் ஊராட்சி மெத்தனம்
மீடியனில் குப்பை குவிப்பு எளாவூர் ஊராட்சி மெத்தனம்
ADDED : ஜூன் 03, 2024 04:29 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சியில், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மகாலிங்க நகர் அமைந்துள்ளது. இங்கு, 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம், இப்பகுதியில் குப்பை கழிவுகளை முறையாக சேகரித்து அப்புறப்படுத்துவதில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், இப்பகுதியில் சேகரமாகும் கழிவுகள், தேசிய நெடுஞ்சாலை மீடியனில் குவிக்கப்படுகின்றன. பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் இருப்பதால், தேசிய நெடுஞ்சாலை பொலிவு இழந்து காணப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் குப்பை குவிப்பதை தவிர்க்க, மகாலிங்க நகரில் முறையாக குப்பை சேகரிக்க வேண்டும். இதற்கு, எளாவூர் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.