/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
ADDED : ஜூன் 03, 2024 04:28 AM

திருத்தணி: திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான தீமிதி விழா, கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. மேலும், உற்சவர் அம்மன் வீதியுலாவும், இரவு மகாபாரத தெருக்கூத்தும் நடந்து வருகிறது.
கடந்த 28ம் தேதி சுபத்திரை அம்மன் திருமணம், 1ம் தேதி அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில், நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக, கோவில் வளாகத்தில் பீமன், துரியோதனன் பொம்மைகள் செய்யப்பட்டு, நாடகக் கலைஞர்கள், 18ம் போர் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.
இரவு 7:00 மணிக்கு அக்னி குண்டத்தில் காப்பு கட்டிய நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்தனர். தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா சென்றார். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.