/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் வெற்றிக் கனியை பறிப்பது யார்? திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் வெற்றிக் கனியை பறிப்பது யார்?
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் வெற்றிக் கனியை பறிப்பது யார்?
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் வெற்றிக் கனியை பறிப்பது யார்?
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் வெற்றிக் கனியை பறிப்பது யார்?
ADDED : ஜூன் 04, 2024 06:10 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் காங்., - சசிகாந்த் செந்தில், தே.மு.தி.க., - நல்லதம்பி, பா.ஜ., - பொன் பாலகணபதி, நாம் தமிழர் - ஜெகதீஷ்சந்தர் உள்ளிட்ட, 14 பேர் போட்டியிட்டனர்.
கடந்த ஏப்., 19ல் நடந்த தேர்தலில், ஆண் - 10,24,149, பெண் - 10,61,457, இதரர் - 385 என, மொத்தம் 20,85,991 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ஆனால், 14,23,885 பேர் மட்டுமே தங்களது ஓட்டை செலுத்தினர். இறுதி நிலவரப்படி, 68.26 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவானது.
ஓட்டுப்பதிவு நிறைவடைந்ததும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மண்டல தேர்தல் அலுவலர் முன்னிலையில், 'சீல்' வைக்கப்பட்டது. பின், அவை அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மந்திர் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டன.
தேர்தல் முடிந்து, 45 நாட்களுக்கு பின், ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணியளவில் துவங்க உள்ளது. திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதி வாரியாக, 14 மேஜைகளில் ஓட்டுகள் எண்ணப்படும்.