/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/5 பேரூராட்சிகளின் எல்லை விரிவாக்கம் 29 ஊராட்சிகளை இணைப்பதற்கு திட்டம்5 பேரூராட்சிகளின் எல்லை விரிவாக்கம் 29 ஊராட்சிகளை இணைப்பதற்கு திட்டம்
5 பேரூராட்சிகளின் எல்லை விரிவாக்கம் 29 ஊராட்சிகளை இணைப்பதற்கு திட்டம்
5 பேரூராட்சிகளின் எல்லை விரிவாக்கம் 29 ஊராட்சிகளை இணைப்பதற்கு திட்டம்
5 பேரூராட்சிகளின் எல்லை விரிவாக்கம் 29 ஊராட்சிகளை இணைப்பதற்கு திட்டம்
ADDED : ஜூன் 04, 2024 06:10 AM
ஊத்துக்கோட்டை, :திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 29 ஊராட்சிகளை, அருகேயுள்ள ஐந்து பேரூராட்சிகளுடன் இணைக்கும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது. இதனால், பேரூராட்சிகளுக்கு வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, ஆரணி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, நாரவாரிக்குப்பம், திருமழிசை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய எட்டு பேரூராட்சிகள் உள்ளன.
ஒவ்வொரு பேரூராட்சியிலும், 8,000 முதல் 19,000 வரை மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிகள், 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
இதிலுள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், கடை வாடகை உள்ளிட்ட வருமானங்கள் மற்றும் தொழில் வரி, வீட்டு வரி ஆகியவையும் வருமானங்களாக உள்ளன.
இந்த வருமானங்களால் சில பேரூராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.
இதில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த, அரசு சிறப்பு நிதி ஒதுக்கும் வரை பேரூராட்சிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலைகளை மேம்படுத்த, நிதியின்றி பேரூராட்சி நிர்வாகம் தத்தளிப்பது ஓர் உதாரணம்.
திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம் 526 ஊராட்சிகள் உள்ளன. பேரூராட்சிகளை ஒப்பிடும் போது, ஊராட்சிகளில் வரி இனங்கள் மிகவும் குறைவு.
ஊராட்சிகளை பேரூராட்சியில் இணைப்பதால், வரி இனங்கள் வாயிலாக பேரூராட்சிக்கு அதிக வருவாய் ஏற்படும். இதன் வாயிலாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதுமான அளவு நிதி ஆதாரம் கிடைக்கும்.
மக்கள் தொகை
கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கீட்டின்படி, ஊத்துக்கோட்டை பேரூராட்சியின் மக்கள் தொகை 12,740. கூடுதலாக சேர்க்கப்படும், 13 கிராமங்களின் மக்கள் தொகை 22,305. மொத்தம் 35, 045 பேர்.
பொதட்டூர்பேட்டையில், 22,040 பேர். ஆறு ஊராட்சிகளில், 9,747 பேர். மொத்தம் 31,787 பேர்; திருமழிசையில் 19,733 பேர். ஐந்து ஊராட்சியில், 23,554 பேர். மொத்தம் 43,287 பேர்.
பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 8,232 பேர். மூன்று ஊராட்சியில் 5,378 பேர். மொத்தம் 13,610 பேர்; கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 18,891 பேர்.
இரண்டு ஊராட்சிகளில், 20,031 பேர். மொத்தம் 38,922 பேர் வசிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், எட்டு பேரூராட்சிகளின் மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, அருகே உள்ள ஊராட்சிகளை இணைக்க அரசு அறிக்கை கேட்டுள்ளது. இதன்படி, பேரூராட்சிகளின் எல்லைகள், கூடுதலாக இணைக்கப்படும் ஊராட்சிகளின் எல்லைகள், மக்கள் தொகை உள்ளிட்ட தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
மாவட்ட அதிகாரி, திருவள்ளூர்.