/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பராமரிப்பு இல்லாத கிணறுகள் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பராமரிப்பு இல்லாத கிணறுகள்
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பராமரிப்பு இல்லாத கிணறுகள்
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பராமரிப்பு இல்லாத கிணறுகள்
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பராமரிப்பு இல்லாத கிணறுகள்
ADDED : ஜூலை 07, 2024 01:12 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், கடந்த 2015ல், நிலத்தடி நீர்மட்டம், 950 அடி ஆழத்திற்கு சென்று விட்டது. இதனால்,ஆர்.கே.பேட்டை, ராஜாநகரம், வங்கனுார், அம்மையார் குப்பம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஏராளமான ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.
மேலும், நீரோட்டம் இல்லாத ஆழ்துளை கிணறுகள் கைவிடப்பட்டன. கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மீண்டும் செறிவூட்டுவதற்காக, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
இதன் வாயிலாக மழைநீர் வடிகட்டப்பட்டு, ஆழ்துளை கிணறுகள் வாயிலாக நிலத்தடிக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதற்கான படிகட்டியில், ஜல்லிகற்கள், மணல் உள்ளிட்டவை நிரப்பி வைத்து மழைநீர் வடிகட்டப்படுகிறது. இந்த வடிகட்டியை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் இந்த அமைப்பு பராமரிப்பு இன்றி புதர் மண்டிக்கிடக்கிறது. குறிப்பாக இ.எம்.ஆர்.கண்டிகை வி.ஏ.ஓ., அலுவலகம் எதிரே உள்ள செறிவூட்டும் கிணறு கவனிப்பு இன்றி பாழடைந்துள்ளது.
மழைக்காலத்தில்இந்த செறிவூட்டும் கிணறை பராமரித்து, மழைநீரை நிலத்தடிக்கு கொண்டு செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.