/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கற்கள் பெயர்ந்த சாலையில் கரடு முரடான பயணம் கற்கள் பெயர்ந்த சாலையில் கரடு முரடான பயணம்
கற்கள் பெயர்ந்த சாலையில் கரடு முரடான பயணம்
கற்கள் பெயர்ந்த சாலையில் கரடு முரடான பயணம்
கற்கள் பெயர்ந்த சாலையில் கரடு முரடான பயணம்
ADDED : ஜூலை 07, 2024 01:13 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கூவம் ஊராட்சி. இங்கிருந்து கொருக்கம்பேடு வழியாக பிள்ளையார்குப்பம் கிராமத்திற்கு செல்லும் ஒன்றிய சாலை கற்கள் பெயர்ந்து பரிதாபமான நிலையில் உள்ளது.
கடந்த 10 ஆண்டுக்கு முன் சீரமைக்கப்பட்ட இந்த ஒன்றிய சாலை, தற்போது மிகவும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளதால், பகுதிவாசிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதில் கொருக்கம்பேடு முதல் பிள்ளையார்குப்பம் செல்லும் 1.07 கி.மீ., துாரமுள்ள சாலை, தற்போது முதல்வரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 61.30 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கூவம் ஊராட்சி சிவன் கோவில் வழியாக கொருக்கம்பேடு செல்லும் சாலை, கடந்த பிப்ரவரி மாதம் சீரமைப்பு பணி துவங்கிய நிலையில், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் கொருக்கம்பேடு பகுதிவாசிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஒன்றிய சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஒன்றிய அலுவலர் கூறுகையில், ''கூவம் சிவன் கோவில் பகுதியிலிருந்து கொருக்கம்பேடு வரை உள்ள 0.8 கி.மீ., துார சாலை சில தினங்களில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்' என்றார்.