/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வங்கனுாரில் தார் சாலை சேதம் பகுதிவாசிகள் அதிருப்தி வங்கனுாரில் தார் சாலை சேதம் பகுதிவாசிகள் அதிருப்தி
வங்கனுாரில் தார் சாலை சேதம் பகுதிவாசிகள் அதிருப்தி
வங்கனுாரில் தார் சாலை சேதம் பகுதிவாசிகள் அதிருப்தி
வங்கனுாரில் தார் சாலை சேதம் பகுதிவாசிகள் அதிருப்தி
ADDED : ஜூலை 07, 2024 01:10 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், 19 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
வங்கனுார் கிராமத்தின் தென் கிழக்கில், வியாசேஸ்வரர் மலைக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் நித்திய பூஜை, பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா உள்ளிட்ட உற்சவங்களுடன் காணும் பொங்கலில்கிரிவலமும் நடந்துவருகிறது.
இந்நிலையில், மலைக்கோவிலுக்கு செல்லும் சாலை, கடந்த ஓராண்டுக்கு முன்கான்கிரீட் சாலையாக மேம்படுத்தப்பட்டது.
சமீபத்தில் இந்த சாலையில் ஒரு ஓரத்தில் சேதமானது. மீண்டும் சீரமைக்கப்படாததால், இந்த வழியாக மலைக் கோவிலுக்குசெல்லும் பக்தர்கள்கடும் அவதிப்பட்டுவருகின்றனர்.
சேதம் சீரமைக்கப்படாமல் நீடிப்பதால், சாலை முழுதும் இடிந்து வரும் நிலை உள்ளது. ஒன்றிய நிர்வாகம் உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.