/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வடகரை ஐ.டி.ஐ.,யில் 31 வரை நேரடி மாணவர்கள் சேர்க்கை வடகரை ஐ.டி.ஐ.,யில் 31 வரை நேரடி மாணவர்கள் சேர்க்கை
வடகரை ஐ.டி.ஐ.,யில் 31 வரை நேரடி மாணவர்கள் சேர்க்கை
வடகரை ஐ.டி.ஐ.,யில் 31 வரை நேரடி மாணவர்கள் சேர்க்கை
வடகரை ஐ.டி.ஐ.,யில் 31 வரை நேரடி மாணவர்கள் சேர்க்கை
ADDED : ஜூலை 19, 2024 02:02 AM
திருவள்ளூர்:வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி மாணவர் சேர்க்கை வரும், 31 வரை நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வடகரை ஆதிதிராவிடர் நல அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிற்கல்வி பெறுவதற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம், வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இங்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், மின்பணியாளர், மோட்டார் வாகன பிரிவுகளிலும்; 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், வெல்டர், கம்பியாளர் ஆகிய பிரிவுக்கும் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் இருபாலரும் ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கு வயது 14-40. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய். பயிற்சிக்கட்டணம் இல்லை.
பயிற்சியில் சேரும் அனைவருக்கும் அரசின் அனைத்து உதவி தொகையும் வழங்கப்படும். நேரடி சேர்க்கைக்கு, முதல்வர், ஆதிதிராவிடர் நல அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வடகரை, செங்குன்றம், சென்னை -52 என்ற முகவரியில் நேரில் உரிய அசல் சான்றுகளுடன் அனுகலாம்.
தொடர்புக்கு 044 -29896032 மற்றும் 94440 09046 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.