/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருமழிசையில் கால்வாய்கள் சீரமைக்கப்படும் திருமழிசையில் கால்வாய்கள் சீரமைக்கப்படும்
திருமழிசையில் கால்வாய்கள் சீரமைக்கப்படும்
திருமழிசையில் கால்வாய்கள் சீரமைக்கப்படும்
திருமழிசையில் கால்வாய்கள் சீரமைக்கப்படும்
ADDED : ஜூலை 19, 2024 02:04 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை தொழிற்பேட்டையில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இப்பகுதியில் கடந்த மிக்ஜாம் புயலின் போது 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து இயந்திரங்கள் பழுதாகி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தொழிற்சாலை உரிமையாளர்கள் சார்பில் தொழிற்பேட்டை வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருக்க நீர் வெளியேற்று கால்வாய்களை தூர்வார வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் நேற்று திருமழிசை தொழிற்பேட்டையில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் தொழிற்பேட்டையில் மழைநீர் தேங்காதவாறு கால்வாய்கள் துார்வாரப்படும்.
செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் இருந்து திருமழிசை தொழிற்பேட்டை தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைநீர் தேங்காதவாறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வரும் மழைக்காலங்களில் பொருட்சேதம் அதிக அளவில் ஏற்படாமல் இருக்கவும் உயிர் சேதத்தை தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஆய்வின் போது திருவள்ளூர் ஆர்.டி.ஓ., கற்பகம், உதவி பேரூராட்சி இயக்குனர் ஜெயக்குமார், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் சரவணன், திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், பேரூராட்சி பொறுப்பு தலைவர் மகாதேவன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.