/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தெருவில் பாயும் ஓடை பாலம் கேட்கும் பகுதிவாசிகள் தெருவில் பாயும் ஓடை பாலம் கேட்கும் பகுதிவாசிகள்
தெருவில் பாயும் ஓடை பாலம் கேட்கும் பகுதிவாசிகள்
தெருவில் பாயும் ஓடை பாலம் கேட்கும் பகுதிவாசிகள்
தெருவில் பாயும் ஓடை பாலம் கேட்கும் பகுதிவாசிகள்
ADDED : ஜூலை 19, 2024 02:02 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது பந்திகுப்பம் கிராமம். இந்த கிராமத்தின் வடக்கில் வீரமங்கமல் காப்புக்காடு அமைந்துள்ளது.
இந்த காப்புக்காட்டின் மழைநீர், ஓடையாக பாய்கிறது. பந்திகுப்பம் தெருவின் குறுக்காக பாயும் ஓடையால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பந்திகுப்பம் கிராமத்தின் கிழக்கு வீதியில் தெருவின் குறுக்காக ஓடை பாய்கிறது. இந்த ஓடைக்கு தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், தெருவின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை; தடுப்பு வரும் இல்லை.
இதனால், வெள்ளம் பெருக்கெடுத்து பாயும்போது, தெருவில் வெள்ளம் புகும் நிலை உள்ளது.
இதனால், பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ளம் பாயும் காலத்தில், தெருவை கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே, தெருவின் குறுக்கே தடுப்பு சுவரும் பாலமும் கட்டப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.