/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அடிப்படை வசதிகள் இல்லாத திருமழிசை பேருந்து நிலையம் அடிப்படை வசதிகள் இல்லாத திருமழிசை பேருந்து நிலையம்
அடிப்படை வசதிகள் இல்லாத திருமழிசை பேருந்து நிலையம்
அடிப்படை வசதிகள் இல்லாத திருமழிசை பேருந்து நிலையம்
அடிப்படை வசதிகள் இல்லாத திருமழிசை பேருந்து நிலையம்
ADDED : ஜூலை 12, 2024 10:43 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது திருமழிசை பேருந்து நிலையம்.
இங்கு ஒத்தாண்டீஸ்வரர் கோவில், ஜெகநாதபெருமாள் திருமழிசை ஆழ்வார் போன்ற புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன.
இங்கிருந்து பிராட்வே, தி.நகர், தாம்பரம், கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு தினமும், 50க்கும் மேற்ப்டட மாநகர பேருந்துகளும், திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி, ஆகிய பகுதிகளிலிருந்து இந்த ஊர்வழியாக சென்னைக்கு செல்லும் பேருந்துகள் என தினமும், 150க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் சென்று வருகின்றன.
இந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் இருக்கை, கழிப்பறை வசதி கிடையாது.
பேருந்து நிலையத்தில் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் அறை பூட்டியே கிடப்பதால் பயன்படில்லாமல் உள்ளது.
பேருந்து நிலையம் அருகே கழிப்பறையும் பராமரிப்பில்லாததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர் மற்றும் பேருந்தின் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பயணியர் மற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அருகில் உள்ள திறந்தவௌி இடத்தை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையத்தில், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்து தரவேண்டுமென பயணியர் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.