/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அனல் மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் அனல் மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அனல் மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அனல் மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அனல் மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 28, 2024 10:33 PM
மீஞ்சூர்:தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், நேற்று அத்திப்பட்டு பகுதியில் உள்ள வடசென்னை அனல்மின்நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், வடசென்னை அனல்மின் நிலையங்களின் ஊழியர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மின்வாரியத்தில் காலியாக உள்ள 32,000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; மின்வாரியத்தை பல்வேறு கூறுகளாக பிரித்து தனியார் மயமாக்கும் போக்கை கைவிட வேண்டும்; மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும்; பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோஷமிட்டனர்.
அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால், ஜூலை 9ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.