/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டம்; 29 பேர் கைது நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டம்; 29 பேர் கைது
நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டம்; 29 பேர் கைது
நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டம்; 29 பேர் கைது
நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டம்; 29 பேர் கைது
ADDED : ஜூன் 28, 2024 10:34 PM
கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கவரைப்பேட்டை பஜார் பகுதி. அப்பகுதியில், கிடப்பில் போடப்பட்டிருந்த மேம்பால பணிகள் இரு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டன. முன்னர் இருந்த சுரங்க பாதை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கடந்து சென்றனர்.
மேம்பால பணிக்காக அந்த சுரங்க பாதை மூடப்பட்டதால் பழைய மேம்பால இடிபாடுகளுக்கு மேல் அனைத்து தரப்பு மக்களும் ஆபத்தாக கடந்து சென்று வருகின்றனர்.
மேலும் மேம்பால பணிகளும் மந்தகதியில் நடந்து வருவதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கிறது. கவரைப்பேட்டை பஜார் பகுதியில் தினசரி, மணிகணக்கில் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேம்பாலத்தின் கீழ் தற்காலிக வழி ஏற்படுத்த வேண்டும், மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இ.கம்யூ., சார்பில், நேற்று கவரைப்பேட்டையில் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில், 30 நிமிடங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தகவல் அறிந்து சென்ற கவரைப்பேட்டை போலீசார், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட, 29 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
131 மீது போலீசார் வழக்கு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியுடன், தாராட்சி, தாமரைகுப்பம், பேரண்டூர், செஞ்சியகரம் ஆகிய நான்கு ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவள்ளூர் மாவட்ட சி.பி.ஐ.எம்., - எல் கட்சி சார்பில் நேற்று முன்தினம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடத்த முயன்ற மாவட்ட செயலர் அன்பு உள்ளிட்ட 131 பேர் மீது, திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
மனை பட்டா
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில், கடந்த 2000ல், 98 பேருக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. தற்போது அதை அரசு ரத்து செய்யவுள்ளதாகவும், அதை கைவிட வேண்டும் எனக்கோரியும், அந்த மனைகளுக்கு உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.