/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணி அரசு கல்லுாரியில் 410 மாணவர்கள் சேர்ப்பு திருத்தணி அரசு கல்லுாரியில் 410 மாணவர்கள் சேர்ப்பு
திருத்தணி அரசு கல்லுாரியில் 410 மாணவர்கள் சேர்ப்பு
திருத்தணி அரசு கல்லுாரியில் 410 மாணவர்கள் சேர்ப்பு
திருத்தணி அரசு கல்லுாரியில் 410 மாணவர்கள் சேர்ப்பு
ADDED : ஜூன் 28, 2024 10:33 PM
திருத்தணி:திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரியில், இளங்கலை பட்டப்படிப்பு பி.எஸ்.சி., பி.காம் பொது, பி.ஏ., பி.சி.ஏ., போன்ற படிப்புகள் உள்ளன. இதில் ஆண்டுக்கு, 686 மாணவ- -மாணவியர் முதலாமாண்டில் புதிதாக சேர்க்கப்படுவர்.
அந்த வகையில் நடப்பாண்டில் அரசு கல்லுாரியில் சேர்வதற்கு மாணவர்கள் இணையதளம் மூலம் மொத்தம், 6,002 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த, 11ம் தேதி துவங்கி, 18 ம் தேதி வரையும், இரண்டாவது கட்ட கலந்தாய்வு, கடந்த, 24ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்தது.
இதுவரை கல்லுாரியில், 410 மாணவ- -மாணவியர் தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் முதலாமாண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள காலியிடங்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்கள் கலந்தாய்வு குறித்து தகவல் அறிய கல்லுாரி இணைய தளம் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம் என கல்லுாரி முதல்வர் பூரணசந்திரன் தெரிவித்தார்.