/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விருது மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விருது
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விருது
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விருது
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விருது
ADDED : ஜூன் 28, 2024 10:32 PM
திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான சேவை புரிந்தோருக்கு மாநில அளவில் விருது வழங்க விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பாக பணிபுரிந்தோர், நிறுவனங்களுக்கு மாநில அளவில் விருது வழங்கப்பட்டு வருகிறது. வரும், ஆக.,15 சுதந்திர தின விழாவில், முதல்வர் விருது வழங்க உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவைபுரிந்தோர் மற்றும் நிறுவனங்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அந்த இணையத்தில் கோரப்பட்ட விபரங்களையும் இணைத்து, வரும் ஜூலை 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.