/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
ADDED : ஜூன் 02, 2024 12:51 AM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரம், திலகர் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம், 55. இவர், நேற்று முன்தினம் குடும்பத்தடன் வெளியூர் சென்றிருந்தார்.
நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், பரமசிவத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
வீடு திரும்பிய பரமசிவம், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த 1 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், 5,000 ரூபாய் பணம் உள்ளிட்டவை திருடு போயிருப்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின்படி, பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.