/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலை சேதப்படுத்தியவர் மீது ஊராட்சி தலைவர் புகார் சாலை சேதப்படுத்தியவர் மீது ஊராட்சி தலைவர் புகார்
சாலை சேதப்படுத்தியவர் மீது ஊராட்சி தலைவர் புகார்
சாலை சேதப்படுத்தியவர் மீது ஊராட்சி தலைவர் புகார்
சாலை சேதப்படுத்தியவர் மீது ஊராட்சி தலைவர் புகார்
ADDED : ஜூன் 02, 2024 12:50 AM
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட செருக்கனூர், தாடூர், எஸ்.அக்ரஹாரம், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம் உள்ளிட்ட ஆறு கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்கள் பயன்பெறும் வகையில், பள்ளிப்பட்டு பகுதி கொசஸ்தலையாற்றினை நீராதாரமாக கொண்டு, ஆறு உறிஞ்சு கிணறுகள் மூலம் நாள்தோறும் நீர் எடுக்கப்பட்டு, இக்குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்க, 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை கிராமத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு பைப்லைன் புதைப்பதற்கு, 730 மீட்டர் தூரம் சிமென்ட் சாலையை குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, ஊராட்சி தலைவர் சவுமியா ராஜசேகர் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை சேதப்படுத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.