Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 108 டிகிரி செல்ஷியஸ் வெயில் அனல் காற்றால் மக்கள் தவிப்பு

108 டிகிரி செல்ஷியஸ் வெயில் அனல் காற்றால் மக்கள் தவிப்பு

108 டிகிரி செல்ஷியஸ் வெயில் அனல் காற்றால் மக்கள் தவிப்பு

108 டிகிரி செல்ஷியஸ் வெயில் அனல் காற்றால் மக்கள் தவிப்பு

ADDED : ஜூன் 02, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில், வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று, 108 டிகிரி செல்ஷியசை தாண்டியது.

தமிழகத்தில், இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை உச்சபட்சமாக வேலுார், திருத்தணி, சேலம், மதுரையில் 100 டிகிரியை தாண்டிய வெப்பம், நேற்று முன்தினம் திருவள்ளூரில் 112 டிகிரியை தாண்டியது.

அனல் காற்று வீசியதால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டனர்.

நேற்றும், பகல் 12:00 மணியளவில், வெயிலின் அளவு 108 டிகிரியை தாண்டியதால், வெப்ப அலை உருவாகி வாகன ஓட்டிகளை பதம் பார்த்தது. வெயிலின் உக்கிரத்தை தவிர்க்க வாகன ஓட்டிகள், முகத்தை துணியால் மறைத்தபடி சென்றனர்.

திருவள்ளூர் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, செங்குன்றம் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள், தங்களுக்கும் உடன் பயணித்த குழந்தைகளுக்கும் முகத்தில் துணியால் கவசம் அணிந்து பயணித்தனர்.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஜே.என்.சாலையோரம் மாற்றுத்திறனாளி ஒருவர், தனது மூன்று சக்கர சைக்கிளை நிறுத்தி, சாலையோரம் மயக்கமடைந்து படுத்துக் கிடந்தார்.

வெப்பத்தின் தாக்கம் மேலும், நான்கு நாட்கள் நீடிக்கும் என, வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், திருவள்ளூர் வாசிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us