/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 02, 2024 12:47 AM

மீஞ்சூர்:வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் போல், இக்கோவிலிலும் 10 நாட்கள் வைகாசி பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
இக்கோவிலின் பின்புறம், ஆனந்த புஷ்கரணி' என்ற திருக்குளம் பராமரிப்பு இன்றி உள்ளது. குளம் முழுதும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளன.
மேலும், இக்குளத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் தொட்டியாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளது. இதனால், பக்தர்கள் முகம்சுளித்து செல்கின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தின் நிலையை கண்டு வேதனை அடைந்துள்ளனர்.
இந்த குளம் பக்தர்களுக்கு மட்டுமின்றி, நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது.
மீஞ்சூர் பகுதியில் நிலத்தடி நீரில் உவர்ப்புத்தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற குளங்களை உரிய முறையில் பராமரிக்காவிட்டால், பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.
எனவே, குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை, செடி, கொடிகளை அகற்றி துாய்மைபடுத்தி, கழிவுநீர், குப்பை போடுவதை தடுக்க, குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.