/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மது அருந்தியதை கண்டித்த போலீசுக்கு 'பளார்' மது அருந்தியதை கண்டித்த போலீசுக்கு 'பளார்'
மது அருந்தியதை கண்டித்த போலீசுக்கு 'பளார்'
மது அருந்தியதை கண்டித்த போலீசுக்கு 'பளார்'
மது அருந்தியதை கண்டித்த போலீசுக்கு 'பளார்'
ADDED : ஜூன் 02, 2024 12:47 AM
ஆர்.கே. நகர்:ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில், காவலராக பணியாற்றி வருபவர் ரஞ்சித். நேற்று முன்தினம் இரவு, கொருக்குப்பேட்டை ரயில்வே தண்டவாளம், கருமாரியம்மன் நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கு இரு வாலிபர்கள் பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை எச்சரித்து கிளம்பும்படி காவலர் ரஞ்சித் கூறினார். ஆத்திரமடைந்த வாலிபர், காவலரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த வாலிபரை பிடித்தனர். மற்றொருவர் தப்பியோடி விட்டார்.