ADDED : ஜூன் 29, 2024 09:58 PM
திருத்தணி:திருத்தணி அடுத்த குமாரகுப்பம் காலனி சேர்ந்தவர் ரகு மகன் சதீஷ்,19. இவர் நேற்று முன்தினம் மேல்திருத்தணி மாதாகோவில் அருகே நின்றுக் கொண்டிருந்த போது, குமாரகுப்பம் காலனி சேர்ந்த பிரகாஷ் என்ற விக்கி,24 என்பவர் அங்கு வந்து, சதீஷ்யை கையால் தாக்கினர்.
மேலும், விக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால், சதீைஷ வெட்ட முயன்ற போது சதீஷ் கீழே விழுந்து தப்பினார். தொடர்ந்து விக்கி அருகே இருந்த உருட்டை கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றார்.
பலத்த காயமடைந்த சதிைஷ அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விக்கியை நேற்று கைது செய்தனர்.