/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மருதவல்லிபுரத்தில் தார்ச்சாலை பணி மும்முரம் மருதவல்லிபுரத்தில் தார்ச்சாலை பணி மும்முரம்
மருதவல்லிபுரத்தில் தார்ச்சாலை பணி மும்முரம்
மருதவல்லிபுரத்தில் தார்ச்சாலை பணி மும்முரம்
மருதவல்லிபுரத்தில் தார்ச்சாலை பணி மும்முரம்
ADDED : ஜூன் 30, 2024 12:17 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சிக்கு உட்பட்டது மருதவல்லிபுரம் கிராமம். இங்கு 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு மருதவல்லிபுரம்-- மணவூர் தார்ச்சாலை, கிராமசாலைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் 2 கி.மீட்டர் நீளத்திற்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு வந்த நிலையில் ஆறு மாதமாக பணி நடைப்பெறாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதனால் கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் ஆங்காங்கே சிதறி மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கிராமத்தின் பிரதான சாலையே இந்த நிலையில் உள்ளதால் பகுதிவாசிகள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட சென்று வர முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானது. இதை அடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தார்ச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.