/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சிறுவாபுரி கோவில் உண்டியல் வசூல் ரூ.87 லட்சம் சிறுவாபுரி கோவில் உண்டியல் வசூல் ரூ.87 லட்சம்
சிறுவாபுரி கோவில் உண்டியல் வசூல் ரூ.87 லட்சம்
சிறுவாபுரி கோவில் உண்டியல் வசூல் ரூ.87 லட்சம்
சிறுவாபுரி கோவில் உண்டியல் வசூல் ரூ.87 லட்சம்
ADDED : ஜூலை 24, 2024 11:14 PM
சிறுவாபுரி:திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக பக்தர்கள் செலுத்துவது வழக்கம்.
கடைசியாக, கடந்த மே மாதம் 2ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதன்பின், நேற்று முன்தினம் கோவில் வெளி பிரகாரத்தில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடந்தன.
உண்டியல் வசூலாக, 87 லட்சத்து, 5 ஆயிரத்து 619 ரூபாயும், 125 கிராம் தங்கம், 9 கிலோ 95 கிராம் வெள்ளி பொருட்கள் கணக்கிடப்பட்டு வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.