/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சப்த கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை சப்த கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
சப்த கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
சப்த கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
சப்த கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூலை 24, 2024 11:14 PM
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் மாமண்டூர் கிராமத்தில் உள்ள சப்த கன்னியம்மன் கோவிலின் திருப்பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
இதற்காக, கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலை, 108 கலசங்கள் வைத்து, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
நேற்று காலை 7:00 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜையும், மகா பூர்ணாஹூதியும் நடந்தது. காலை 9:30 மணிக்கு நான்காம் கால பூஜையும், கலச ஊர்வலம் மற்றும் மூலவருக்கு கலசநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
காலை 11:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.