/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ உடைந்து தொங்கும் சிக்னல் கம்பம் கயிறு கட்டி காப்பாற்றும் காவல் துறை உடைந்து தொங்கும் சிக்னல் கம்பம் கயிறு கட்டி காப்பாற்றும் காவல் துறை
உடைந்து தொங்கும் சிக்னல் கம்பம் கயிறு கட்டி காப்பாற்றும் காவல் துறை
உடைந்து தொங்கும் சிக்னல் கம்பம் கயிறு கட்டி காப்பாற்றும் காவல் துறை
உடைந்து தொங்கும் சிக்னல் கம்பம் கயிறு கட்டி காப்பாற்றும் காவல் துறை
ADDED : ஜூன் 07, 2024 02:02 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் - ஈக்காடு சாலை சந்திப்பில், உடைந்து தொங்கும் சிக்னல் கம்பத்தை, போலீசார் கயிறு மூலம் அருகில் உள்ள மின்கம்பத்தில் கட்டி காப்பாற்றி வருகின்றனர்.
திருவள்ளூர் தேரடியில் இருந்து செங்குன்றம் சாலையில், ஈக்காடு வளைவு மற்றும் வடக்கு ராஜவீதி சந்திப்பு உள்ளது. செங்குன்றம் வழியாக செல்லும் வாகனங்கள் ஈக்காடு சாலை சந்திப்பில் வேகமாக வருகின்றன.
மேலும், பஜார் வீதிக்கு செல்வோர், இந்த சந்திப்பை கடந்து, வடக்கு ராஜவீதிக்கு செல்ல வேண்டும். அதேபோல், வடக்கு ராஜவீதியில் இருந்து தேரடி, வீரராகவர் கோவில் வழியாக செல்லும் வாகனங்களும்இந்த சந்திப்பை கடக்கின்றன.
இதனால், மூன்று சாலை சந்திக்கும் இந்த இடத்தில், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன. இதையடுத்து, வாகனங்கள் மெதுவாக பிரிந்து செல்லும் வகையில், காவல் துறையினர் கடந்த சில ஆண்டுக்கு முன், சாலை சந்திப்பு அருகில் சிக்னல் அமைத்தனர்.
தற்போது, சிக்னல் கம்பம் பழுதாகி, உடைந்து தொங்கும் நிலையில் ஆபத்தாக உள்ளது. அந்த வழியாக செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சிக்னலை கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில், உடைந்த சிக்னல் கம்பத்தை, காவல் துறையினர் கயிறு கொண்டு, அருகில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து தற்காலிகமாக அதை காப்பாற்றி வருகின்றனர்.
பலத்த காற்றடித்தால், கயிறு அறுந்து, மின்கம்பம் கீழே விழுந்து விடும் நிலை உள்ளதால், அப்பகுதிவாசிகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எனவே, திருவள்ளூர் மாவட்ட காவல் துறையினர் ஆபத்தான முறையில் உடைந்திருக்கும் சிக்னலை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.