Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ லட்சுமாபுரமா... லட்சுமிவிலாசபுரமா? 'குரூப் - 4' நுழைவு சீட்டில் குழப்பம்

லட்சுமாபுரமா... லட்சுமிவிலாசபுரமா? 'குரூப் - 4' நுழைவு சீட்டில் குழப்பம்

லட்சுமாபுரமா... லட்சுமிவிலாசபுரமா? 'குரூப் - 4' நுழைவு சீட்டில் குழப்பம்

லட்சுமாபுரமா... லட்சுமிவிலாசபுரமா? 'குரூப் - 4' நுழைவு சீட்டில் குழப்பம்

ADDED : ஜூன் 04, 2024 06:20 AM


Google News
திருவள்ளூர் : திருவள்ளூர் 'குரூப் - 4' தேர்வு நுழைவு சீட்டில், லட்சுமாபுரத்திற்கு பதில் லட்சுமிவிலாசபுரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குழப்பத்திற்கு கலெக்டர் பிரபுசங்கர் அளித்துள்ள விளக்கம்:

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 'குரூப் - 4' எழுத்து தேர்வு, வரும் 9ம் தேதி முற்பகல் மட்டும் 194 தேர்வு மையங்களில், 58,127 தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதில், திருவள்ளூர் மாவட்டம், தேர்வு மைய எண்: 2108, திருத்தணி பாலிடெக்னிக் கல்லுாரி கூடம் - 006ல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லுாரி அமைந்துள்ள லட்சுமாபுரம் தேர்வு மையத்தில், 300 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தற்போது வெளியாகி உள்ள குரூப் - 4 நுழைவு சீட்டில், தேர்வு கூடம் - 006, திருத்தணி பாலிடெக்னிக் கல்லுாரி, சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை, லட்சுமாபுரம் என்பதற்கு பதிலாக, லட்சுமிவிலாசபுரம் என கிராமத்தின் பெயர் தவறுதலாக வெளியாகியுள்ளது.

எனவே, குரூப் - 4 தேர்வு எழுத உள்ளோர், திருத்தணி பாலிடெக்னிக் கல்லுாரி லட்சுமாபுரம் என்பதே சரியான முகவரி. மேலும் விபரங்களுக்கு, 044 -- 2959 7003 மற்றும் 94449 82770 என்ற தேர்வு மையத்தின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us