/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கலெக்டர் தலைமையில் கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தி கலெக்டர் தலைமையில் கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தி
கலெக்டர் தலைமையில் கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தி
கலெக்டர் தலைமையில் கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தி
கலெக்டர் தலைமையில் கும்மிடிப்பூண்டியில் ஜமாபந்தி
ADDED : ஜூன் 04, 2024 06:20 AM
கும்மிடிப்பூண்டி, : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட ஒன்பது வட்டங்களிலும், 1433ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம், இம்மாதம், 7ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
கும்மிடிப்பூண்டி வட்டத்தில், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் இம்மாதம், 7, 11, 12, 13, 14, 18 மற்றும் 19 ஆகிய ஏழு நாட்கள் ஜமாபந்தி நடைபெற இருக்கிறது.
கும்மிடிப்பூண்டி வட்டத்தில், மாதர்பாக்கம், எளாவூர், பூவலம்பேடு, கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு உள்வட்டங்களில், 87 கிராமங்கள் உள்ளன.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில், அந்தந்த உள்வட்டத்தை சேர்ந்த மக்கள், அனைத்து துறை சார்ந்த மனுக்களை அளிக்கலாம்.