/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
ADDED : ஜூன் 04, 2024 06:21 AM
திருவள்ளூர் : பெயின்ட் கம்பெனியில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள 'ஜென் பெயின்ட் அண்ட் கெமிக்கல்' கம்பெனியில், கடந்த 31ல் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அம்பத்துார், சுகந்தி, 55, புஷ்கர், 37, கடம்பத்துார் பார்த்தசாரதி, 51, ஆகிய மூன்று பணியாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
மேலும், விபத்தின்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெரியகுப்பம் சீனிவாசன், 37, தலையில் தகர கூரை விழுந்து, பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்ப வாரிசுதாரருக்கு, தமிழக அரசு சார்பில், தலா 2 லட்சம் ரூபாயை, கலெக்டர் பிரபுசங்கர் நேற்று வழங்கினார்.