/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தென்மண்டல டேக்வாண்டோ போட்டி 65 பதக்கங்கள் குவித்த காஞ்சி வீரர்கள் தென்மண்டல டேக்வாண்டோ போட்டி 65 பதக்கங்கள் குவித்த காஞ்சி வீரர்கள்
தென்மண்டல டேக்வாண்டோ போட்டி 65 பதக்கங்கள் குவித்த காஞ்சி வீரர்கள்
தென்மண்டல டேக்வாண்டோ போட்டி 65 பதக்கங்கள் குவித்த காஞ்சி வீரர்கள்
தென்மண்டல டேக்வாண்டோ போட்டி 65 பதக்கங்கள் குவித்த காஞ்சி வீரர்கள்
ADDED : ஜூன் 24, 2024 05:01 AM

காஞ்சிபுரம்: தென்மாநில மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி, கர்நாடக மாநிலம், வடக்கு பெங்களூருவில் உள்ள ஜாக்கூரில் நடந்தது. இதில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், தமிழக அணி சார்பில், காஞ்சிபுரம் பல்லவர் டேக்வாண்டோ அசோசியேஷன் செயலர் கணேஷ் தலைமையில், 50 மாணவ - -மாணவியர் பங்கேற்றனர்.
இதில், பல்வேறு பிரிவுகளில் 40 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என, 65 பதக்கங்கள் பெற்று, காஞ்சிபுரம் மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.