/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நெடுஞ்சாலையோரம் தொழிற்சாலை கழிவுநீர் நெடுஞ்சாலையோரம் தொழிற்சாலை கழிவுநீர்
நெடுஞ்சாலையோரம் தொழிற்சாலை கழிவுநீர்
நெடுஞ்சாலையோரம் தொழிற்சாலை கழிவுநீர்
நெடுஞ்சாலையோரம் தொழிற்சாலை கழிவுநீர்
ADDED : ஜூலை 08, 2024 05:59 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இருந்து சிறுபுழல்பேட்டை வழியாக குருவராஜகண்டிகை பேருந்து நிறுத்தம் வரை செல்லும் சாலை, மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது.
அந்த சாலையில் சிறுபுழல்பேட்டை எல்லை முடியும் இடத்தில், சாலையோரம் துர்நாற்றம் வீசும் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.
இது குறித்து கிராமத்தினர் கூறுகையில், இரவு நேரத்தில் டேங்கர் லாரிகளில் ஏற்றி வரப்படும் தொழிற்சாலை கழிவுநீர் அப்பகுதியில் திறந்து விடுவதாக தெரிவிக்கின்றனர்.
நெடுஞ்சாலை துறையினரும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாததால், கழிவுநீர் தேக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, அப்பகுதி முழுதும் ரசாயன நெடியுடன் துர்நாற்றம் வீசுகிறது.
அப்பகுதியின் நிலத்தடி நீர் பாதிப்பதுடன், அதன் அருகே நீரோடை செல்வதால், அதன் கீழ் உள்ள நீர் நிலைகளும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தினர், தேங்கியுள்ள கழிவுநீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். ஆய்வு முடிவுக்கு பின், விதிமீறி செயல்படும் தொழிற்சாலையை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.