/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மீஞ்சூரில் போக்குவரத்து நெரிசல் போலீசார் கண்காணிக்க வலியுறுத்தல் மீஞ்சூரில் போக்குவரத்து நெரிசல் போலீசார் கண்காணிக்க வலியுறுத்தல்
மீஞ்சூரில் போக்குவரத்து நெரிசல் போலீசார் கண்காணிக்க வலியுறுத்தல்
மீஞ்சூரில் போக்குவரத்து நெரிசல் போலீசார் கண்காணிக்க வலியுறுத்தல்
மீஞ்சூரில் போக்குவரத்து நெரிசல் போலீசார் கண்காணிக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 08, 2024 05:58 AM
மீஞ்சூர்: மீஞ்சூர் பஜார் பகுதியில், 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மீஞ்சூரை சுற்றியுள்ள, கிராமங்களின் முக்கிய வியாபார மையமாக இது உள்ளது.
இதனால் நாள் முழுதும் பஜார் பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்கும். மேலும், காட்டுபள்ளியில் உள்ள துறைமுகங்கள், அத்திப்பட்டியில் அமைந்திருக்கும் பெட்ரோலிய நிறுவனங்கள் ஆகிவற்றிற்கு செல்லும் வாகனங்களும், இந்த பஜார் பகுதியை கடந்துதான் சென்று வரவேண்டும்.
அதேபோன்று, மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு சென்று வரும் பயணியரும் பஜார் பகுதி வழியாகவே பயணிக்கின்றனர்.
தொடர் போக்குவரத்து, ரயில் பயணியர் மற்றும் கடைகளுக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களால், பஜார் பகுதி நெரிசலாக இருக்கிறது. மீஞ்சூர் - சாலை சந்திப்பில் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக பயணித்து, போக்கு வரத்து ஸ்தம்பிக்கிறது.
குறிப்பாக காலை, மாலை நேரங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், ரயில் பயணியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பஜார் பகுதியில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையமும் செயல்பாடு இன்றி உள்ளது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், மீஞ்சூர் பஜார், மீஞ்சூர் - காட்டூர் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில், போக்குவரத்து போலீசார் பணியமர்த்தி கண்காணிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.