/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ரயில் கழிப்பறையில் முதியவர் உயிரிழப்பு ரயில் கழிப்பறையில் முதியவர் உயிரிழப்பு
ரயில் கழிப்பறையில் முதியவர் உயிரிழப்பு
ரயில் கழிப்பறையில் முதியவர் உயிரிழப்பு
ரயில் கழிப்பறையில் முதியவர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 08, 2024 06:00 AM
அரக்கோணம்: சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கமல்சந்த் வஜவாத், 66. இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஏலகிரிக்கு சுற்றுலா செல்ல பெங்களூரு செல்லும் அதிவிரைவு ரயிலில் உறவினர்களுடன் சென்றார்.
ரயில் திருவள்ளூரை கடந்தபோது கழிப்பறைக்கு சென்ற கமல்சந்த் வஜவாத் வழுக்கி விழுந்துள்ளார். இதுகுறித்து அவரது உறவினர்கள் அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரயில் அரக்கோணம் ரயில் நிலையம் வந்ததும் அங்கிருந்த மருத்துவர் பரிசோதித்ததில் கமல்சந்த் வஜவாத் இறந்தது தெரியவந்தது.
அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.