ADDED : ஜூன் 12, 2024 02:11 AM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அடுத்த திருமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 45. ேஹாட்டலில் வேலை செய்து வரும் இவர் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு மனைவி குமுதாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் குடிக்க பணம் கேட்ட போது மனைவி தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் மனைவியை அருவாமனையால் தலையில் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த குமுதா ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மப்பேடு போலீசார் ராஜேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.