ADDED : ஜூன் 12, 2024 02:10 AM
வேப்பேரி:சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின் படி, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஏழு நாட்களில், வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து, 50 கிலோ கஞ்சா, 17.29 லட்சம் ரூபாய், ஒன்பது மொபைல்போன்கள், ஐந்து இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.