/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மின் கட்டண உயர்வை கண்டித்து 'லாந்தர்' விளக்குடன் ஆர்ப்பாட்டம் மின் கட்டண உயர்வை கண்டித்து 'லாந்தர்' விளக்குடன் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து 'லாந்தர்' விளக்குடன் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து 'லாந்தர்' விளக்குடன் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து 'லாந்தர்' விளக்குடன் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 24, 2024 01:53 AM

திருவள்ளூர்:தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்காததைக் கண்டித்து அ.தி.மு.க.,வினர் 'லாந்தர்' விளக்குடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தமிழகத்தில் மும்முறை மின்கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் துவரம்பருப்பு, பாமாயில், கோதுமை வழங்காதது போன்றவற்றைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று திருவள்ளூர் டோல்கேட் அருகில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலர் ரமணா, அமைப்புச் செயலர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்; ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு, பாமாயில் தொடர்ந்து விநியோகிக்க வேண்டும் என கோஷமிட்டு, கோரிக்கையினை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், சிலர் 'லாந்தர்' விளக்குடன் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பூண்டி, கடம்பத்துார், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஒன்றியங்களில் இருந்து திரளான அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க, சார்பில் நேற்று பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் சிறுணியம் பலராமன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பங்கேற்று பேசினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியதால், ஏழை மக்கள் வேதனையில் தவிக்கின்றனர். இந்த மின்கட்டண உயர்வை உடனே ரத்து செய்யவேண்டும்.
லோக்சபா தேர்தலில், தி.மு.க., விற்கு ஓட்டளித்த மக்களுக்கு கிடைத்த பரிசுதான் இந்த மின்கட்டண உயர்வு.
தமிழகத்தில் நடைபெறும் இந்த மோசமான ஆட்சி, வீட்டிற்கு அனுப்ப வேண்டும். சட்டசபை தேர்தலை இந்தநாடே எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் இந்த ஆட்சி கவிழும்.
இவ்வாறு அவர் கூறினார்.