/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாந்தீஸ்வரர் பரிகார பூஜை பக்தர்களுக்கு வஸ்திரம் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை பக்தர்களுக்கு வஸ்திரம்
மாந்தீஸ்வரர் பரிகார பூஜை பக்தர்களுக்கு வஸ்திரம்
மாந்தீஸ்வரர் பரிகார பூஜை பக்தர்களுக்கு வஸ்திரம்
மாந்தீஸ்வரர் பரிகார பூஜை பக்தர்களுக்கு வஸ்திரம்
ADDED : ஜூலை 06, 2024 10:38 PM

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு தமிழக மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் 2,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோவிலில், சனிக்கிழமை தோறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடந்து வருகிறது. இந்த பூஜையில் பங்கேற்றால் சனி, ஜென்ம தோஷம் தீரும் மற்றும் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இந்த பூஜையில், காலை 8 -- 12 மணி வரையில் மூன்று குழுக்களாக 200 பக்தர்கள் வரை பங்கேற்று வருகின்றனர். கட்டணத்தொகையாக 1,600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி கோவில் நிர்வாகம் சார்பில் பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, மாலை என எட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின் படி, கடந்த வாரம் முதல் மாலைக்கு பதிலாக பக்தர்களுக்கு வஸ்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.