/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பள்ளி மாணவர்கள் திருத்தணி கோவிலில் தரிசனம்பள்ளி மாணவர்கள் திருத்தணி கோவிலில் தரிசனம்
பள்ளி மாணவர்கள் திருத்தணி கோவிலில் தரிசனம்
பள்ளி மாணவர்கள் திருத்தணி கோவிலில் தரிசனம்
பள்ளி மாணவர்கள் திருத்தணி கோவிலில் தரிசனம்
ADDED : ஜூலை 06, 2024 10:39 PM

திருத்தணி:திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து பொது வழி மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று நீண்ட வரிசையில் காத்திருந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தாலுகா சிட்லம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், 150க்கு மேற்பட்டோர், வரலாற்று சிறப்பு மிக்க, 600 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ, சோழ மன்னர்களால் ஏற்படுத்தப்பட்டு, அருணகிரிநாதர் திருத்தணி கோவில் போற்றி 63 திருப்பாடல்களை பாடியுள்ளதை அறிந்து நேற்று காலையில் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு கல்விசுற்றுலாவாக வந்தனர்.
பின் மாணவர்கள் மூலவர் முருகப்பெருமானை தரிசித்த பின், முருகன் கோவில் தல வரலாறு, கட்டடக் கலைகள் குறித்து பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆர்வமுடன் கேட்டறிந்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டன மேலும் மாணவர்கள் குழுவாக மலைக்கோவிலில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.