/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்
ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்
ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்
ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்
ADDED : ஜூலை 06, 2024 10:37 PM
திருவள்ளூர்:ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரிஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல துறையின் கீழ் உயர்நிலை, மேல்நிலை, நடுநிலை மற்றும் ஆரம்ப பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில் 22 இடைநிலை ஆசிரியர், 6 பட்டதாரி ஆசிரியர் பணி காலியாக உள்ளது. இந்த இடங்கள், தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக நியமனம் செய்யப்பட உள்ளது.
இடைநிலை ஆசிரியருக்கு 12,000, பட்டதாரி ஆசிரியருக்கு 15,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பத்தை நேரடியாகவோ அல்லது தபால் வாயிலாக, உரிய சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வரும், 10 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.