/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குழந்தை திருமணம் தடுப்பு ஆலோசனை கூட்டம் குழந்தை திருமணம் தடுப்பு ஆலோசனை கூட்டம்
குழந்தை திருமணம் தடுப்பு ஆலோசனை கூட்டம்
குழந்தை திருமணம் தடுப்பு ஆலோசனை கூட்டம்
குழந்தை திருமணம் தடுப்பு ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 06, 2024 10:13 PM
திருவள்ளூர்:திருவள்ளூரில் குழந்தை திருமணம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:
பள்ளி தலைமை ஆசிரியர், குழந்தைகள் நலக்குழு, காவல் துறையினர் பாலியல் தொல்லையில் இருந்து குழந்தைகள் பாதுகாத்து கொள்ளும் வகையில், 'நல்ல தொடுதல்கெட்ட தொடுதல்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் குழந்தை திருமணங்கள், பாலியல் ரீதியான, இன்னல்களில் தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குழந்தை திருமணங்கள் குறித்த புகார் வரப்பெற்றால் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முழு தகவல்களை பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்பேசினார்.
கூட்டத்தில், ஏ.டி.எஸ்.பி., அரிக்குமார், முதன்மை கல்வி அலுவலர்ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் வாசுகி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.