/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பவானியம்மன் கோவில் ஆடி மாத விழா பக்தர்களின் வசதிகளுக்கு நடவடிக்கை பவானியம்மன் கோவில் ஆடி மாத விழா பக்தர்களின் வசதிகளுக்கு நடவடிக்கை
பவானியம்மன் கோவில் ஆடி மாத விழா பக்தர்களின் வசதிகளுக்கு நடவடிக்கை
பவானியம்மன் கோவில் ஆடி மாத விழா பக்தர்களின் வசதிகளுக்கு நடவடிக்கை
பவானியம்மன் கோவில் ஆடி மாத விழா பக்தர்களின் வசதிகளுக்கு நடவடிக்கை
ADDED : ஜூலை 06, 2024 10:11 PM
பெரியபாளையம்:தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் பெரியபாளையம் பவானியம்மன் கோவில் முக்கியமானது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர்.
இங்கு நடைபெறும் ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும்.
இதில் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று தங்கி, தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர்.
இந்தாண்டு இவ்விழா வரும், 17 ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆர்.டி.ஓ.,கற்பகம் தலைமையில் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ் வரவேற்றார்.
ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,கணேஷ்குமார், தாசில்தார் மதன் மற்றும் வருவாய், காவல், பொதுப்பணி, போக்குவரத்து, தீயணைப்பு, சுகாதாரம், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்பங்கேற்றனர்.
இதில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, மருத்துவ முகாம், தற்காலிக பேருந்து நிறுத்தம், குப்பைகளை அகற்றுதல், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.