/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தீக்குளித்து இறந்த வாலிபரின் உடலை வாங்காமல் முற்றுகை தீக்குளித்து இறந்த வாலிபரின் உடலை வாங்காமல் முற்றுகை
தீக்குளித்து இறந்த வாலிபரின் உடலை வாங்காமல் முற்றுகை
தீக்குளித்து இறந்த வாலிபரின் உடலை வாங்காமல் முற்றுகை
தீக்குளித்து இறந்த வாலிபரின் உடலை வாங்காமல் முற்றுகை
ADDED : ஜூலை 08, 2024 02:05 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 33. பொது பாதையை ஆக்கிரமித்து, இவர் கட்டியிருந்த வீட்டை, கடந்த 4ம் தேதி, கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி தலைமையிலான வருவாய் துறையினர் இடித்தனர்.
தன்னிடம் பட்டா இருப்பதாகவும், ஆக்கிரமிப்பு அகற்ற போதிய கால அவகாசம் வழங்க கோரியும், தாசில்தார் ஏற்காமல் வீட்டை இடித்ததால், தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி, ராஜ்குமார் தீயிட்டுக்கொண்டார்.சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று காலை உயிரிழந்தார்.
இந்நிலையில், உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர், ராஜ்குமார் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், இறப்புக்கு காரணமானோரை கைது செய்ய வலியுறுத்தியும், வி.சி., கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து, கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர்.
தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுவதாக உறுதி அளித்தால் மட்டுமே, ராஜ்குமார் சடலத்தை வாங்குவதாக கூறி, இரவு வரை காவல் நிலையத்திலே இருந்தனர்.