/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பென்னலுார்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம் பென்னலுார்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்
பென்னலுார்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்
பென்னலுார்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்
பென்னலுார்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்
ADDED : ஜூன் 20, 2024 01:10 AM

ஊத்துக்கோட்டை,:ஊத்துக்கோட்டை அருகே, பென்னலுார்பேட் டை கிராமத்தில் உள்ளது அரசு மேனிலைப் பள்ளி. இங்கு ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
தலைமை ஆசிரியர் உள்ளிட்ட, 12 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இங்கு மாணவியருக்கு மட்டும் கழிப்பறை உள்ளது. மாணவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை.
இந்த கழிப்பறையும் சுத்தம் செய்ய ஆட்கள் இல்லாததால், துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஜீவாவிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று வகுப்பறையை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை, பென்னலுார்பேட்டை போலீஸ் ஆய்வாளர்கள் ஏழுமலை, வெங்கடேசன் ஆகியோர் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சு நடத்தினர்.
தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சு நடத்தினார்.
இதில் பள்ளி வளாகம், கழிப்பறை, குடிநீர் வசதிகள் சீராக இல்லை. இதை கண்டு கொள்ளாத தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறினர். பள்ளியில் குடிநீர், கழிப்பறை, பள்ளி வளாகம் துாய்மையாக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இப்பள்ளி தலைமையாசிரியர் ஜீவா, பள்ளிப்பட்டு அரசு மேனிலைப் பள்ளியில் பணிபுரியும் போது மாணவர்கள் போராட்டம் நடந்துள்ளது. தற்போது இங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோரிடம் ஒருமையில் பேசுவதாகவும், மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.