/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சோளிங்கரில் ஆண்டாள் நாச்சியார் உற்சவம் சோளிங்கரில் ஆண்டாள் நாச்சியார் உற்சவம்
சோளிங்கரில் ஆண்டாள் நாச்சியார் உற்சவம்
சோளிங்கரில் ஆண்டாள் நாச்சியார் உற்சவம்
சோளிங்கரில் ஆண்டாள் நாச்சியார் உற்சவம்
ADDED : ஜூன் 08, 2024 12:50 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டைமாவட்டம், சோளிங்கர் மலைக்கோவிலில் அருள்பாலிக்கும் யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள்கோவில் சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. கொண்டபாளையம் மலையடிவாரத்தில் பிரம்மதீர்த்தம் எனப்படும் தக்கான்குளம் உள்ளது. தக்கான் குளக்கரையில், வரதராஜபெருமாள் அருள்பாலிக்கிறார். கோவில் நகரமான சோளிங்கருக்கு திரளான பக்தர்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
வைகாசி வெள்ளிக்கிழமையான நேற்று மாலை பக்தோசித பெருமாள் கோவில் ஆண்டாள் நாச்சியார் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில், மங்கல வாத்தியங்கள் முழங்க, ஆண்டாள் நாச்சியார் உள்புறப்பாடு எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.