/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ உலக பால் தின விழாவில் விவசாயிகளுக்கு பரிசு உலக பால் தின விழாவில் விவசாயிகளுக்கு பரிசு
உலக பால் தின விழாவில் விவசாயிகளுக்கு பரிசு
உலக பால் தின விழாவில் விவசாயிகளுக்கு பரிசு
உலக பால் தின விழாவில் விவசாயிகளுக்கு பரிசு
ADDED : ஜூன் 08, 2024 12:51 AM

திருவள்ளூர்:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின், கோடுவெளி உணவு மற்றும் பால் வள தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், மெய்யூரில் உலக பால் தின விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்திய பால்வள சங்கத்துடன் இணைந்து நடந்த இந்த விழாவை கல்லுாரி முதல்வர் குமரவேலு தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
சிறந்த கறவை மாடு மற்றும் கன்றுகளுக்கான போட்டி நடத்தப்பட்டு, அடர் தீவனம், தாது உப்புக்கலவை மற்றும் பால் உபகரணம் பரிசாக வழங்கப்பட்டது.
பாலின் நன்மை குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. மேலும், பால் உற்பத்தியை பெருக்கும் வழிமுறை, புவி வெப்பமயமாதலை தடுத்தல் குறித்து, பண்ணையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பல்கலைக்கழக தொலைதுார கல்வி இயக்குனர் அனிகுமார், இந்திய பால் வள சங்க தலைவர் கண்ணா, கறவை பசு இனப்பெருக்கத்தில் புதிய தொழில்நுட்பம் குறித்து விளக்கினர்.