/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஆடிப்பட்ட காய்கறி விதைக்கு முன் விதை பரிசோதிக்க ஆலோசனை ஆடிப்பட்ட காய்கறி விதைக்கு முன் விதை பரிசோதிக்க ஆலோசனை
ஆடிப்பட்ட காய்கறி விதைக்கு முன் விதை பரிசோதிக்க ஆலோசனை
ஆடிப்பட்ட காய்கறி விதைக்கு முன் விதை பரிசோதிக்க ஆலோசனை
ஆடிப்பட்ட காய்கறி விதைக்கு முன் விதை பரிசோதிக்க ஆலோசனை
ADDED : ஜூலை 18, 2024 08:38 PM
திருவள்ளூர்:ஆடிப்பட்டத்தில் காய்கறி விதைக்கும், நல்ல மகசூல் பெற, விதைகளை பரிசோதனைக்கு பின் விதைக்குமாறு வேளாண் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட விதைப் பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் சுகுணா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், ஆடிப் பெருக்கு தினத்தில் காய்கறி விதைப்பது விவசாயிகளின் பாரம்பரிய பழக்கம். ஆடி மாதத்தில் விதை விதைக்கும் போது, விவசாயிகள் சரியான தொழில்நுட்பத்தை கடைப்பிடித்தால் மகசூல் இரட்டிப்பாகும்.
காய்கறி பயிர்களின் விதை அதிகம் என்பதால், விதைப்பதற்கு முன் அதன் முளைப்புத்திறன் பரிசோதனை செய்ய வேண்டும். அதிக மகசூல் பெற தரமான விதைகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
தரமான விதைகளை பயன்படுத்துவதன் வாயிலாக, குறைந்த அளவு விதை, சீரான மற்றும் வேகமான முளைப்புத்திறன், குறைவான பூச்சி தாக்குதல், 15-20 சதவீதம் வரை அதிக மகசூல் போன்ற நன்மை கிடைக்கும்.
நீண்ட நாள் சேமிப்புக்கு பிறகு விதையை பயன்படுத்தும் முன், விதை பரிசோதனை செய்து, விதையின் தரம், முளைப்புதிறன் அறிந்து பயிரிட்டால் இழப்பினை தவிர்க்கலாமண். ஒவ்வொரு விவசாயியும், தங்கள் கைவசம் உள்ள மற்றும் கடைகளில் வாங்கும் விதையின் ஈரப்பதம், முளைப்புத்திறன் அறிய, ஜே.என்.சாலை, ஆயில்மில் அருகில் பெரியகுப்பம், திருவள்ளூர் என்ற முகவரியில் கொடுத்து விதையின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.