/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மீஞ்சூர் - வண்டலுார் சாலையில் மெகா பள்ளங்களால் விபத்து மீஞ்சூர் - வண்டலுார் சாலையில் மெகா பள்ளங்களால் விபத்து
மீஞ்சூர் - வண்டலுார் சாலையில் மெகா பள்ளங்களால் விபத்து
மீஞ்சூர் - வண்டலுார் சாலையில் மெகா பள்ளங்களால் விபத்து
மீஞ்சூர் - வண்டலுார் சாலையில் மெகா பள்ளங்களால் விபத்து
ADDED : ஜூலை 23, 2024 01:07 AM

பொன்னேரி, மீஞ்சூர் - வண்டலுார் இடையான, 61 கி.மீ., தொலைவிற்கான வெளிவட்ட சாலை, கடந்த 2020ல் பயனுக்கு வந்தது. தென்மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து, மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு, தினமும் வந்து செல்லும் 20,000க்கும் அதிகமான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றன.
இந்நிலையில், மீஞ்சூர் வெளிவட்ட சாலை - திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதியில் ஆங்காங்கே சேதம் அடைந்து பள்ளங்களாக இருக்கின்றன.
மீஞ்சூர் நோக்கி வரும் வாகனங்கள் இந்த பள்ளங்களை கடக்கும்போது தடுமாற்றம் அடைகின்றன. வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் அங்கு பேரிகார்டு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் சாலை குறுகலாகி வாகனங்கள் சிரமத்துடன் பயணிக்கின்றன.
காலை, மாலை நேரங்களில், அதிக போக்குவரத்து இருப்பதால், மேற்கண்ட பகுதியை கடக்கும்போது வாகன நெரிசலும் ஏற்படுகிறது.
மேற்கண்ட பகுதியில் ஏற்பட்டுள்ள, பள்ளங்களை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
l கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலமும், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையும் இணையும் முக்கிய சந்திப்பு பகுதி உள்ளது. அங்கு, தேசிய நெடுஞ்சாலை சார்பில், மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அந்த கால்வாய் மீது இருந்த கான்கிரீட் மூடிகள் பல இடங்களில் உடைந்துள்ளன.
அதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் கால்வாய் மூடி உடைந்திருப்பது தெரியாமல், பலர் அதில் கவிழ்நது விழும் நிலை ஏற்படுகிறது.
ஆபத்தாக உள்ள அப்பகுதியை, வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.