/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/நெடுஞ்சாலைகளில் உலா வரும் மாடுகள்: காற்றில் பறக்கும் உத்தரவு நெடுஞ்சாலைகளில் உலா வரும் மாடுகள்: காற்றில் பறக்கும் உத்தரவு
நெடுஞ்சாலைகளில் உலா வரும் மாடுகள்: காற்றில் பறக்கும் உத்தரவு
நெடுஞ்சாலைகளில் உலா வரும் மாடுகள்: காற்றில் பறக்கும் உத்தரவு
நெடுஞ்சாலைகளில் உலா வரும் மாடுகள்: காற்றில் பறக்கும் உத்தரவு
ADDED : ஜூலை 23, 2024 01:06 AM

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆவடி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, ஆர்.கே. பேட்டை ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
இப்பகுதிகளில் உள்ள மாநில, மாவட்ட மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
அனைத்து நெடுஞ்சாலைகளிலும் கால்நடைகள் உலா வருவது மற்றும் இளைப்பாறுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இதை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர், எஸ்.பி., கடந்த 2019ம் ஆண்டு முதல் உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக திருமழிசை - ஊத்துக்கோட்டை, கடம்பத்துார் - பேரம்பாக்கம், மணவாளநகர் - ஸ்ரீபெரும்புதுார், தண்டலம் - அரக்கோணம், மப்பேடு - சுங்குவார்சத்திரம், திருநின்றவூர் பெரியபாளையம் ஆகிய நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளால் வாகன ஒட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில இடங்களில் நெடுஞ்சாலையோரம் மாட்டுத் தொழுவமாகவே மாறியுள்ளது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2019 முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றியங்களைச் சேர்ந்த அலுவலர்கள் பிடித்து அதன் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும்.
மேலும், உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி வருகின்றார்.
ஆனால் நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகள் குறித்து சம்பந்தப்பட்ட ஒன்றிய, பேரூராட்சி அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் உத்தரவையே அதிகாரிகள் காற்றில் பறக்க விட்டது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுளளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.