Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மகளிர் குழுக்களுக்கு ரூ.35 லட்சம் கடனுதவி

மகளிர் குழுக்களுக்கு ரூ.35 லட்சம் கடனுதவி

மகளிர் குழுக்களுக்கு ரூ.35 லட்சம் கடனுதவி

மகளிர் குழுக்களுக்கு ரூ.35 லட்சம் கடனுதவி

ADDED : ஜூலை 31, 2024 04:30 AM


Google News
ஊத்துக்கோட்டை, : ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம், கச்சூர் ஆகிய கிராமங்களில், 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சந்திரசேகர், பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.

இதில் போந்தவாக்கம், மாம்பாக்கம், வேளகாபுரம், மாமண்டூர் உள்ளிட்ட, 15 கிராம மக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக வழங்கினர்.

கும்மிடிப்பூண்டி தி.மு.க., எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று, இக்கிராமங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு, 35 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கினார்.

மேலும், இலவச வீட்டு மனை, பட்டா மாற்றம், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட தேவைகள் குறித்து, 500க்கும் மேற்பட்டோர் மனுக்கள் வழங்கினர்.

திருவாலங்காடு


திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், ஹரிச்சந்திராபுரம் உட்பட ஒன்பது ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சின்னம்மாப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.

முகாமை சின்னம்மாபேட்டை ஊராட்சி தலைவர் சரண்யா நாகராஜன் துவங்கி வைத்தார்.

இதில், 19 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். 833 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 76 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீது துறை ரீதியான விசாரணைக்குப் பின், 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us