/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தாழ்வாக செல்லும் மின்கம்பி மின்வாரிய அதிகாரிகள் மவுனம் தாழ்வாக செல்லும் மின்கம்பி மின்வாரிய அதிகாரிகள் மவுனம்
தாழ்வாக செல்லும் மின்கம்பி மின்வாரிய அதிகாரிகள் மவுனம்
தாழ்வாக செல்லும் மின்கம்பி மின்வாரிய அதிகாரிகள் மவுனம்
தாழ்வாக செல்லும் மின்கம்பி மின்வாரிய அதிகாரிகள் மவுனம்
ADDED : ஜூலை 31, 2024 04:28 AM

கும்மிடிப்பூண்டி, : கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பட்டு அருகே உமிப்பேடு கிராமத்தில் இருந்து பட்டுப்பள்ளி கிராமத்திற்கு செல்லும் சாலையின் இருபுறமும் விளைநிலங்கள் உள்ளன.
அங்குள்ள விவசாய நிலத்தின் மீது மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. குறிப்பாக ஒரு பகுதியில், நெற்பயிர்களை ஒட்டி தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
விவசாயிகள் சற்று கவனக்குறைவாக இருந்தால்கூட மின்சாரம் பாயும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து தேவம்பட்டு துணைமின் நிலையத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, உயிர்ப்பலி ஏற்படும் முன், உடனடியாக மின் வழித்தட்தப்பாதையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.